பாய்ண்ட் ஆஃப் சேல் (பி.ஓ.எஸ் ) பேமெண்ட் தீர்வு

ஒரு முனையம், பல அம்சங்கள், அதுதான் எச்.டி.எஃப்.சி உங்களுக்கு வழங்கும் சிறப்பான வணிகத் தீர்வுகள் உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் மிகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளும் திறன் கொண்ட, பேமெண்ட் முறைகளின் பரந்த வரம்பை ஆதரிக்கும் டிஜிபி.ஓ.எஸ் இயந்திரங்களை உங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம். வாடிக்கையாளர்களிடமிருந்து உங்கள் கடையில் அல்லது தொலைவிலிருந்து எவ்வித சிரமமும் இன்றி பேமெண்ட் பெறுங்கள்

பி.ஓ.எஸ் இயந்திரங்கள் இரண்டு வகைகளில் கிடைக்கின்றன, மேலும் பல அம்சங்களோடு வருகின்றன. ஊடாடும் இடைமுகம் மற்றும் விரைவான இணைப்பு கொண்ட நவீன கால முனையங்கள் அல்லது குறைந்த விலை கொண்ட முனையங்கள் இவற்றில் இருந்து தேர்வு செய்யலாம். இதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்மார்ட்ஹப் டிஜிபி.ஓ.எஸ்-இன் அம்சங்கள்:

  1. பேமெண்ட் முறைகளின் பல தேர்வுகள்: டிஜிபி.ஓ.எஸ் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் டேப், டிப் அல்லது ஸ்வைப் என பல வழிகளில் பேமெண்ட் பெறலாம். பாரத் க்யூ.ஆர் குறியீடு, யூ.பி.ஐ, பேஸாப், போன் பே, ஜிபே, பீம் யூ.பி.ஐ, மொபிக்விக் மற்றும் பேடிஎம் யூ.பி.ஐ பயன்படுத்தி ஸ்கேன் செய்து செலுத்தலாம். ஹோம் டெலிவரி முறையோடு தொலைவில் இருந்து பேமெண்ட் பெறலாம் , எஸ்.எம்.எஸ் பே மூலம் பேமெண்ட் இணைப்புகளைப் பகிர்ந்து ஹோம் டெலிவரி பேமெண்ட்களை உடனடியாகப் பெறலாம். இது அனைத்து வகையான பேமெண்ட்களுக்கும் ஏற்ற நேர்மையான விற்பனை முனையம்.
  2. சிறந்த இணைப்பு: 3ஜி, 4ஜி, சிம் கார்டு அல்லது வைஃபை வழியாக உங்கள் டிஜிபி.ஏ.எஸ்-ஐ உபயோகிக்கலாம்.
  3. ஸ்மார்ட்ஹப் இயக்கப்பட்டது: உங்கள் டிஜிபி.ஓ.எஸ் முனையம் ஸ்மார்ட்ஹப் வணிகர் பயன்பாட்டுடன் ஒருங்கிணைந்து வருகிறது.
  4. நிகழ்நேர அறிக்கைகள்: வணிகம் சார்ந்த அனைத்து பரிவர்த்தனை அறிக்கைகளையும் காண்க.
  5. நெகிழ்வான ரசீது விருப்பத் தேர்வுகள்: காகிதமில்லாத அல்லது காகித அடிப்படையிலான ரசீதுகளை வழங்குங்கள்.
  6. வாடிக்கையாளர் ஆதரவு: உங்கள் முனையம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்கு உதவ, அழைப்பு, இன்-ஆப் வெப் செய்தி அல்லது இமெயில் மூலம் 7 பிராந்திய மொழி ஆதரவுடன் 24x7 வாடிக்கையாளர் சேவை ஆதரவை நீங்கள் பெற முடியும்.
  7. உங்கள் வணிகத்திற்கு ஏற்ற சிறந்த பி.ஓ.எஸ் முனையங்களை எவ்வித மறைமுக செலவுகளும் இல்லாத நியாயமான கட்டணம் மற்றும் ஈர்க்கும் விலைத் திட்டங்களுடன் பெறுங்கள்.
  8. மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்: உங்கள் பரிவர்த்தனை வரலாற்றின் அடிப்படையில் வணிக கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள், வாடிக்கையாளர்களுக்கு ஈஸிஇ.எம்.ஐ தேர்வை வழங்கி பெரிய தொகைகளை எளிதான இ.எம்.ஐ-களாக மாற்றுங்கள். செட்டில்மெண்ட்களை பாதுகாப்பாகக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கை இணைக்கலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கார்டு ஸ்வைப் இயந்திரத்தை எப்படி வாங்குவது? / கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் இயந்திரத்தைப் எப்படிப் பெறுவது?

உங்கள் எச்.டி.எஃப்.சி வங்கி வணிகக் கணக்கை துவக்கியபின், உங்கள் ஸ்மார்ட்ஹப் தீர்வுக் கணக்கை அமைக்க உங்கள் வங்கிப் பிரதிநிதியிடம் கேளுங்கள் அல்லது எங்கள் நிர்வாகி உங்களைத் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கார்டு ஸ்வைப் இயந்திரம் எவ்வாறு செயலாற்றுகிறது?

கார்டு ஸ்வைப் இயந்திரம் உங்கள் டெபிட் & கிரெடிட் கார்டுகள் தட்டவும், டிப் செய்யவும் அல்லது ஸ்வைப் செய்யவும் அல்லது டிஜி.பி.ஓ.எஸ் டெர்மினல் மூலம் பல்வேறு கட்டண தளங்களைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்யவும் வணிகரை அனுமதிக்கிறது. பண செலுத்துவதைத் தவிர அனைத்து கட்டண முறைகளுக்கும் இது ஒரு இயந்திரம்.

எனது கடையில் கார்டு ஸ்வைப் இயந்திரத்தை நிறுவுவது எப்படி?

டிஜி.பி.ஓ.எஸ் இயந்திரம் வயர்லெஸ் ஆகும், இதனால் இதற்கு அதிக வேக வைஃபை இணைப்பு தேவை. கூடுதலாக, சாதனத்தின் செயல்பாட்டிற்கு சிம் கார்டைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்.

மாறுபட்ட கிரெடிட் கார்டு செயலாக்கக் கட்டணங்கள் யாவை?

உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பி. ஓ.எஸ் அல்லது இ.டி.சி இயந்திரத்திற்கான பல்வேறு கட்டணங்களைக் காண, இங்கே கிளிக் செய்யவும்.



நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்