வலைப்பதிவு

உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.

தயாரிப்பு விவரப்பட்டியலை எவ்வாறு உருவாக்குவது

ஆன்லைனில் சாதனங்கள் முதல் மளிகை சாமான்கள் ஆர்டர் செய்வது வரை, கடந்த பல வருடங்களில் ஷாப்பிங் செய்யும் முறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நீங்கள் ஒரு குறு அல்லது நடுத்தர வணிக அமைப்பின் உரிமையாளராக இருந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே வசதியாகவும் பாதுகாப்பாகவும் ஆர்டர் செய்வதை விரும்புவதை கவனித்திருப்பீர்கள். மளிகை கடை போன்ற சிறு வணிகங்கள் பாரம்பரிய முறையிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாறும் நடவடிக்கை மெதுவாக ஆனால் சீராக நடைபெற்று வருகிறது. முறைப்படி நிர்வகிக்க, சரியான தீர்வுகளின் தொகுப்பை நீங்கள் வைத்திருப்பது அவசியம்.

ஆர்டர் செய்வது குறித்து நோக்கும்போது, தற்போது வாங்க விரும்பும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்பதைவிட அதன் படங்களைக் காண்பதற்கே மக்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். ஒரு கடை உரிமையாளராக, உங்கள் சரக்கு மற்றும் வரவை திறம்பட நிர்வகிக்க வேண்டியது அவசியம். எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்புடன், தயாரிப்பு விவரப்பட்டியலை நீங்கள் எளிதாக உருவாக்கலாம். வாடிக்கையாளர்களை எளிதாகச் சென்றடைய, உங்கள் தயாரிப்பின் க்யூ.ஆர் குறியீட்டை நீங்கள் பகிரலாம் மற்றும் தொலைவில் இருந்தபடியே பணத்தை வசூலிக்கலாம்.

தயாரிப்பு விவரப் பட்டியலை எவ்வாறு உருவாக்கி க்யூ.ஆர் குறியீடு மூலம் பகிர்வது என்பதற்கான படிகள் இங்கே:

  1. ஸ்மார்ட்ஹப் ஆப்-இல் உள்நுழையவும்
  2. மெனுவிலிருந்து தயாரிப்பு பகிர்தல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  3. தயாரிப்பின் பெயர், தொகை * மற்றும் செல்லுபடியாகும் இறுதி தேதி போன்ற தயாரிப்பு சார்ந்த விவரங்களை உள்ளிடவும்.
  4. தயாரிப்பின் படத்தைச் சேர்க்கவும் - நீங்கள் நேரடியாக தயாரிப்பின் படத்தைக் கிளிக் செய்யலாம் அல்லது கேலரியில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவேற்றலாம்.
  5. விவரங்களை உள்ளிட்டவுடன், ப்ரிவியூவை கிளிக் செய்யவும். வணிகரின் நிலையான க்யூ.ஆர் குறியீட்டுடன் தயாரிப்பின் படம் இணைக்கப்பட்டு ஆப்-இல் காண்பிக்கப்படும்.
  6. இந்த இணைக்கப்பட்ட படத்தை ' 'பதிவிறக்கம்' செய்யலாம் அல்லது 'படத்தைப் பகிர்க' விருப்பத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகம், வாட்ஸ்அப் இல் பகிரலாம், 'அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் பகிரலாம்.
  7. வாடிக்கையாளர்கள் இந்த க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, எந்தவொரு பணம் செலுத்தல் முறையையும் பயன்படுத்தி தயாரிப்புகளை வாங்கலாம்.
  8. பணம் செலுத்தப்பட்டவுடன் வணிகருக்குத் தகவல் அறிவிக்கப்படும்.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் அனுபவத்தை மிகவும் வசதியான ஒன்றாக ஸ்மார்ட்ஹப் மாற்றியமைக்கும். தயாரிப்பு விவரப்பட்டியலை எவ்வாறு எளிதாக உருவாக்குவது என்பதை அறிந்துள்ளீர்கள், அதற்கு உதவும் ஸ்மார்ட்ஹப் தீர்வுகளைப் பெற இங்கே கிளிக் செய்க.

பொறுப்புத்துறப்பு: * தொகை ரூ.10000-க்கு மேல் இருக்க முடியாது..

தொடர்புடைய கட்டுரைகள்

மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாடு என்ன

மேலும் படிக்கவும்

வணிகக் கணக்கிணக்கச் சவால்களை சமாளிப்பது எப்படி?

மேலும் படிக்கவும்

ஒரு சில்லறை வணிகத்தை மேம்படுத்துவது எப்படி?

மேலும் படிக்கவும்

ஒரு நம்பகமான பார்ட்னருடன்

டிஜிட்டல் நுட்பத்துடன் மேம்படுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்