வலைப்பதிவு

மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீடுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

நிலையான மற்றும் மாறும் க்யூ.ஆர் குறியீடுக்கு இடையே உள்ள வேறுபாடு

உங்கள் குரல் கட்டளைக்கு ஏற்ப உங்கள் மனநிலையுடன் பொருந்துமாறு வண்ணத்தை மாற்றக்கூடிய நவீன கால ஸ்மார்ட் ஒளி விளக்குகளைப் பற்றி சிந்தியுங்கள். அவை அறிவுப்பூர்வமாகப் பணியாற்றுகிறதல்லவா? இது போலத்தான் க்யூ.ஆர் குறியீடுகளும் பயனர்களுக்கு உதவுகிறது. இவற்றில் இரண்டு வகைகள் உண்டு. நிலையானவை மற்றும் மாறுபவை.

நிலையான மற்றும் மாறும் க்யூ.ஆர் குறியீடுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை ஒரு வணிகராக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எளிதாகச் சொன்னால், மாறும் க்யூ.ஆர் குறியீடுகளை திருத்திப் பகிர முடியும். நிலையான க்யூ.ஆர் குறியீடுகளை மாற்ற முடியாது.

நீங்கள் சரியான குறியீட்டைத் தேர்வு செய்ய உதவியாக, மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீட்டைப் புரிந்துகொள்ள உதவும் வழிகாட்டி இங்கே அளிக்கப்பட்டுள்ளது:

திருத்துதல் அவசியமா அல்லது தேவையில்லையா? க்யூ.ஆர் குறியீடுகளை திருத்த முடியுமா என்று பல வணிகர்கள் எண்ணுவதுண்டு. நீங்கள், ஒரு சிக்கலான காலகட்டத்திற்குப் பிறகு வணிகத்தை மீண்டும் துவக்க முயற்சிக்கும் ஒரு உணவக உரிமையாளர் என்று வைத்துக் கொள்வோம். மறுதுவக்கத்தின் போது வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ற புதிய டிஜிட்டல் மெனுவை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள். ஆனால் துவக்குவதற்கு ஒரு நாள் முன்பு, நீங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது ஒரு அத்தியாவசிய ஐட்டம் குறிப்பிடப்படவில்லை என்பதை அறிகிறீர்கள். க்யூ.ஆர் குறியீடு ஏற்கனவே சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றில் அச்சிடப்பட்டுவிட்டது, மேலும் டேக்-அவே மெனுக்களின் பின்புறத்திலும் கூட அச்சிடப்பட்டுவிட்டது.

மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீட்டுக்கு இடையிலான வேறுபாட்டின் முக்கியப் பயனை இந்த வழக்கு செவ்வனே விளக்குகிறது, இந்த நிலையில் நீங்கள் மாறும் க்யூ.ஆர்-ஐ தேர்ந்தெடுத்திருந்தால், தரவைத் திருத்துவதற்கான விருப்பம் இந்தச் சிக்கலை எளிதில் தீர்க்க உதவி யிருக்கும். இங்கு நீங்கள் தரவை மாற்றியமைப்பது மட்டுமே போதுமானது, அதைச் சார்ந்த க்யூ.ஆர் குறியீடு சரியான விவரங்களுடன்கூடிய பக்கத்திற்கு பார்வையாளர்களைத் திருப்பி அனுப்பும். அதே சமயம், நீங்கள் ஒரு நிலையான க்யூ.ஆர் குறியீட்டை தேர்வு செய்திருந்தால், உங்கள் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் டேக்-அவே மெனுக்களில் புதிய க்யூ.ஆர் குறியீட்டை மேம்படுத்த வேண்டும்.

பிறகு நிலையான க்யூ.ஆர் குறியீட்டின் அவசியம் என்ன? நீங்கள் ஒரு சீசன் சார்ந்த/மாறாத மெனுவைத் திட்டமிட்டால், அதற்கான நிலையான க்யூ.ஆர் குறியீட்டை உருவாக்கி உபயோகிக்கலாம். சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் பி.ஆர் நிகழ்வுகளுக்கு நிலையான குறியீடுகளும் சிறப்பாக செயல்படுகின்றன. உங்கள் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க ஒரு முறை வழங்கப்படும் சலுகைகளுக்கு நிலையான க்யூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள க்யூ.ஆர் குறியீடுகள் உதவியாக இருக்குமா? நிலையான க்யூ.ஆர் குறியீட்டில் அது சாத்தியமில்லை. எனினும், மாறும் க்யூ.ஆர் குறியீடுகளில் இதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன! வாடிக்கையாளர்கள் எங்கு, எப்போது, எந்த சாதனம் கொண்டு க்யூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்தார்கள் என்ற தகவலை நாம் அறிய வாய்ப்புண்டு. ஒரு வணிக உரிமையாளராக, சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் அல்லது புதிய தயாரிப்புகளில் தள்ளுபடிகள் போன்ற நடவடிக்கைகளைத் திட்டமிட இத் தரவைப் பயன்படுத்தலாம். பிரச்சாரத்த்தின் நோக்கம் என்ன அதை எவ்வாறு அமைப்பது என்பது முற்றிலும் உங்களைச் சார்ந்ததே.

ஒரே க்யூ.ஆர் குறியீடு ஒரு நபரின் மொபைல் போன் மூலம் வெவ்வேறு இடங்களில் ஸ்கேன் செய்யப்படும்போது, இடத்திற்கேற்ப தரவையோ உள்ளடக்கத்தையோ மாற்றிக் காட்சிப்படுத்த முடியும். தங்களுக்குப் பிடித்த சோடா பான கேன் பற்றி உங்கள் வாடிக்கையாளர் சிந்திக்கிறார்களா? உங்கள் மாறும் க்யூ.ஆர் குறியீட்டை அவர்கள் ஸ்கேன் செய்தால், அது அவர்களை வணிகம் செய்யும் உங்களிடம் அழைத்து வரும். மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள அதே க்யூ.ஆர் குறியீடு, உங்கள் வணிக சங்கிலியில் அருகாமையில் உள்ள வேறு கடைக்கு அவரை வழிநடத்தும். பள்ளிகளில் சுவரொட்டிகளில் உள்ள க்யூ.ஆர் குறியீடுகள் எழுதுபொருள் சில்லறை விற்பனையாளர்களை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவும்.

இந்த இரண்டு எடுத்துக்காட்டுகள், சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தொடர்புகளுக்கு வழிவகுக்கும் நிலையான மற்றும் மாறும் க்யூ.ஆர் குறியீடுகள் மூலம் வணிக உரிமையாளர்கள் எவ்வாறு உள்ளடக்கத்தைத் தனிப்பட்ட முறையில் மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.

க்யூ.ஆர் குறியீடுகளிலிருந்து உள்ளூர் வணிகங்கள் பயன் பெறுமா? மளிகைக் கடை, டீ-ஸ்டால்கள் ஆகியவையும் க்யூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை ஏற்கலாம். நேரடித் தொடர்பு குறைக்கப்படவேண்டிய கால கட்டங்களில், க்யூ.ஆர் குறியீடு வழியாக டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை பாதுகாப்பான மற்றும் வசதியான தேர்வாகும். ஆன்லைன் சரக்குப் பட்டியல் (மளிகைக் கடைக்காரர்) மற்றும் ஒரு மெனு (டீ ஸ்டால் உரிமையாளர்) ஆகியவற்றை உருவாக்க நீங்கள் மாறும் க்யூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் தொலைபேசியை உபயோகித்தே உங்கள் வாடிக்கையாளர்கள் வசதியாக தேவையானவற்றைக் காண முடியும்.

க்யூ.ஆர் குறியீடுகளைப் பலவித செயல்களுக்கு உபயோகிக்கலாம், நிதி நெருக்கடி நேரத்தில் கூட இவை குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுகிறது. இது வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் விரைவான மற்றும் எளிதான பணம் செலுத்தும் வழியாகும். நிலையான மற்றும் மாறும் க்யூ.ஆர் குறியீடுகளுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது உங்கள் வணிகத்திற்குப் பொருந்தும் முறையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

நிலையான மற்றும் மாறும் க்யூ.ஆர் குறியீடுகளுடன் தடையற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள எச்.டி.எஃப்.சி வங்கியின் வணிக அமைப்புகளுக்கான ஸ்மார்ட்ஹப் தீர்வுகள் உங்களுக்குத் துணை புரிகிறது. தொடங்குவதற்கு, இப்போதே எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்

மேலும் படிக்கவும்

உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.

மேலும் படிக்கவும்

உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.

மேலும் படிக்கவும்


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்