வலைப்பதிவு

உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.

ஆன்லைன் வணிகத்தின் பலன்கள்

வணிக உரிமையாளர் என்ற வகையில், வெளிப்புறக் காரணிகள் அல்லது நெருக்கடியால் ஏற்படும் விற்பனை வீழ்ச்சியைச் சமாளிக்க உதவும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருக்கலாம். வாடிக்கையாளர்கள் வெளியே வந்து ஷாப்பிங் செய்ய அச்சப்படும் இவ்வேளையில், ஹோம் டெலிவரி முறை பல வணிகங்களுக்கான வருமான ஆதாரமாக மாறி கடைக்கு வந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு மாற்றாக உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் உங்கள் வணிகத்தை நீங்கள் மேம்படுத்த விரும்பினால் அல்லது தக்கவைத்துக் கொள்ள விரும்பினால், ஆன்லைன் வர்த்தக முறையையும் ஏற்பது அவசியம் என்பதற்கு இது சான்றாகும்.

நீங்கள் நடத்துவது சில்லறை வணிகம், சலூன், மளிகைக்கடை, உள்ளூர் சுகாதார கிளினிக் என எதுவாக இருந்தாலும், வணிகம் சார்ந்து தொடர்ந்து நிர்வகிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கக் கூடும். கண்காணித்தல் முதல் பணம் வழங்குதல் வரை, சரக்கு கையாளுதல் முதல் விலை நிர்வாகம் வரை ஒரு வணிகத்தின் தினசரி நடவடிக்கைகளில் பல சிக்கலானவை. ஆனால் எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் போன்ற டிஜிட்டல் பணம் செலுத்தல் தீர்வை உபயோகிப்பதன் மூலம், எளிதாக உங்கள் வணிகத்தை ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனுக்கு எடுத்துச் செல்லமுடியும். அதோடு, ஆட்டோமேஷன், நேரம் தவறாமை மற்றும் பாதுகாப்பு ஆகிய சிறப்பு அம்சங்களை வழங்கும் தொழில்நுட்பத்தின் பயனையும் அனுபவிக்கலாம்.

உங்கள் வணிகத்தை இந்தப் புதிய இயல்பு முறை சார்ந்து விரிவாக்க ஆறு வழிகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன:

சுலபமான நிதி மேலாண்மை:கிரெடிட் நிலுவை முதல் தினசரி கணக்கிணக்கம் வரை பாரம்பரிய வழியில் கணக்குகளை நிர்வகிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பது அறிந்ததே. ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது பணம் செலுத்தலை நீங்கள் தவறவிட்டால், அது பில்லிங் சுழற்சி முழுமையையும் பாதிக்கக்கூடும்.

பணம் செலுத்தலை தானியக்கமாக்குவதன் மூலம், நீங்கள் தினசரி பணப் புழக்கத்தை எளிதாகக் கண்காணிக்கலாம். ஸ்மார்ட்ஹப் போன்ற டிஜிட்டல் பணம் செலுத்தல் அமைப்பு, தாமதமாகப் பேமெண்ட் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதை எளிதாக நிர்வகிக்க உதவியாக ஒருங்கிணைந்த அறிக்கைகளை வழங்குகிறது. பணம் செலுத்தல் சார்ந்த பதிவுகள் மற்றும் செலுத்திய முன்பணம் ஆகியவற்றை ஒரே தளத்திலிருந்து கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற அம்சங்கள் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் சேமிக்கும்.

பாதுகாப்பு மற்றும் உறுதி: சட்டவிரோத அணுகல் அல்லது கையாளுதலிலிருந்து உங்கள் வணிகத் தரவைப் பாதுகாக்கும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்பை வடிவமைத்துள்ளது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் கடவுச்சொல் (ஓ.டி.பி) மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகல் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இம்முறையில், வங்கி மூலம் விரைவாகத் தீர்வு காண ஏதுவாக, பாதுகாப்பான பணம் செலுத்தல் இணைப்புகள் மூலம் நீங்கள் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பலாம்.

வசூலுக்கென பல முறைகள்: டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் முறை விரைவாக செயல்பட உதவுவதோடு கவுண்ட்டரில் ரொக்கப் பணம் செலுத்துகையில் சில்லறை தேடி வீணாகும் நேரத்தை முழுமையாக அகற்றும். இது நேரத்தை மிச்சப்படுத்தி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும். மாதம் ஒருமுறை தங்கள் கணக்குகளைத் தீர்க்க விரும்பும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு, தனிப்பட்ட விலைப்பட்டியலுடன் பணம் செலுத்தலை எளிதாக இணைக்கலாம். இதனால் புக் கீப்பிங்கை வெளிப்படையாவும், சீராகவும் மேற்கொள்ளலாம். இத்தகைய தானியங்கி பில்லிங் முறை, பிழையற்ற அமைப்பை உறுதிப்படுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற உதவுகிறது.

குறைந்த அளவில் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள்: இந்தத் தொற்றுநோய் பரவும் காலகட்டத்தில் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியம், பணப் பரிவர்த்தனைகளுக்கான மக்களின் அணுகுமுறைகளை மாற்றியுள்ளது. வணிக அமைப்புகளையும், சேவை வழங்குநர்களையும் டிஜிட்டல் பணம் செலுத்தல் தேர்வுகளுக்கு மாற இந்த கொரொனோ வைரஸ் நெருக்கடி ஊக்குவித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒன் - ஸ்டாப் தீர்வாக வடிவமைக்கப்பட்ட எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப், வாடிக்கையாளர்களிடமிருந்து பல முறைகளில் ரொக்கமற்ற பேமெண்ட்களை ஏற்க அனுமதிக்கிறது: க்யூ.ஆர் கோடு ஸ்கேனிங், எஸ்.எம்.எஸ் பேமெண்ட் லிங்க், யூ.பி.ஐ பேமெண்ட் - பேஸாப், ஆன்லைன் பேமெண்ட் கேட்வே - நெட்பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, வயர்லெஸ் கார்டு ஸ்வைப் ஆகிய முறைகளில் நீங்கள் ரொக்கமற்ற வகையில் பேமெண்ட்களை ஏற்கலாம்.

தானியங்கு கணக்கிணக்கம்: ரீஃபண்ட் முதல் தள்ளுபடிகள் வரை கண்காணிப்பது, அன்றைய நாள் விற்பனையைச் சமன் செய்வது போன்றவை இக்கட்டானது. தவிர, மேனுவலாக புக் கீப்பிங் செய்வது, குறிப்பாக காணாமல் போன பொருட்கள் மற்றும் இயக்க செலவினங்களுக்கான கணக்குகளை நிர்வகிக்கும்போது, தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. பேமெண்ட் கணக்கிணக்கத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதன் மூலம், வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பெற்ற பேமெண்ட்களை ஒருங்கிணைந்த பார்வையாகக் காணலாம்.

திறமையான வணிக மேலாண்மை: சரக்கு கண்காணிப்பு மற்றும் தணிக்கை போன்ற பணிகளை எளிதில் தானியக்கமாக்கி, அனைத்தையும் நீங்களே நிர்வகிக்கும்போது, ​​உங்கள் வணிகத்தில் பல்வேறு செயல்முறைகளை நிர்வகிக்க ஒருவரை ஏன் நியமிக்க வேண்டும்? எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்பின் ஒருங்கிணைந்த அறிக்கை வணிகத்தை எளிதாக நிர்வகிக்க உங்களுக்குத் துணை புரிகிறது. அவ்வப்போது மேற்கொள்ளவேண்டிய பணிகளைக் கூட இதில் தானியக்கமாக்கலாம்.

உங்கள் வணிகத்தை ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனுக்கு விரைவாகவும் சிக்கலின்றியும் மாற்றுதல்: டிஜிட்டல் பணம் செலுத்தல் முறைகளுக்கு மாற நினைத்தால், அதை எளிமையாகவும், வசதியாகவும் செய்து முடிக்க எச்.டி.எஃப்.சி வங்கியின் ஸ்மார்ட்ஹப் உங்களுக்கு உதவும். பராமரிப்புக் கட்டணங்கள் அல்லது நிறுவல் சிக்கல்கள் என எதுவும் இல்லை. 24x7 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியில் ஒரு பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர் உங்கள் உதவிக்கு தயாராக இருக்கும் வாய்ப்பை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் உங்கள் வணிகத்தை விரிவாக்கவும் டிஜிட்டல்மயமாக்கலின் ஆற்றலை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாடு என்ன

மேலும் படிக்கவும்

வணிகக் கணக்கிணக்கச் சவால்களை சமாளிப்பது எப்படி?

மேலும் படிக்கவும்

ஒரு சில்லறை வணிகத்தை மேம்படுத்துவது எப்படி?

மேலும் படிக்கவும்


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்