வலைப்பதிவு

நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்

பி.ஓ.எஸ்-இன் அம்சங்கள்

பணம் செலுத்தல்களைச் செயலாக்க பி.ஓ.எஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், பி.ஓ.எஸ் என்றால் என்ன? ஒரு பி.ஓ.எஸ் முனையம் அல்லது பாய்ண்ட் ஆஃப் சேல் முனையம் என்பது வாடிக்கையாளரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து தகவல்களைப் படிக்கவும், கார்டு பேமெண்ட்களை செயல்படுத்தவும் விற்பனையகங்களில் பயன்படும் ஒரு வன்பொருள் சாதனமாகும். தடையற்ற பணம் செலுத்துதல் செயலாக்கத்திற்காக பலவகை பணம் செலுத்துதல் ஒப்புதல் தீர்வுகளை ஒரே முனையத்தின் மூலம் வழங்க முடியும். எச்.டி.எஃப்.சி வங்கியின் டிஜிபி.ஓ.எஸ் முனையங்களின் வரிசை இந்த பிராண்டின் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கண்கவர் தோற்றத்துடன் சில சிறப்பான பணம் செலுத்துதல் அம்சங்களும் இணைந்து வருகின்றன.

பாய்ண்ட் ஆஃப் சேல்முனையம் என்றால் என்ன என்பது குறித்து அனைத்தும் நீங்கள் அறிந்துள்ள நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கியின் டிஜிபி.ஓ.எஸ் முனையங்களின் சிறப்பம்சங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்:

ஆம்னி சேனல் பி.ஓ.எஸ் - எச்.டி.எஃப்.சி வங்கி டிஜிபி.ஓ.எஸ்-ஐ கார்டுகள், க்யூ.ஆர், யூ.பி.ஐ, எஸ்.எம்.எஸ் பேக்கு பயன்படுத்தலாம். நீங்கள் பண பரிவர்த்தனைகளை பதிவு செய்யலாம் மற்றும் தொலைவில் இருந்து பணம் சேகரிக்கலாம். கூகுள்பே, போன்பே போன்ற ஆப் மூலம் வாடிக்கையாளர் பணம் செலுத்த முடியும்.

நிகழ்நேர அறிக்கைகள்- அனைத்து பேமெண்ட்களையும் ஒரே திரையில் நிகழ் நேரத்தில் நீங்கள் பார்க்க முடியும். உங்கள் பி.ஓ.எஸ் முனையத்தின் மூலம் கடந்த 90 நாட்கள் வரையிலான பணம் செலுத்தப்பட்ட வரலாற்றையும் நீங்கள் அணுகலாம்.

பின்னர் செலுத்துக -கணக்கு - எச்.டி.எஃப்.சி டிஜிபி.ஓ.எஸ் முனையத்த்தின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் கணக்கை (கணக்கு) டிஜிட்டல் முறையில் நீங்கள் பராமரிக்கலாம். பல கணக்குகளை பராமரிப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை, நிகழ் நேரத்தில் அனைத்து பணம் செலுத்தல் நிலுவைகளையும் அணுகலாம். நிலுவையில் உள்ள பணம் செலுத்தல் கோரிக்கைகளை அனுப்பி பி.ஓ.எஸ் மூலம் பணத்தை வசூலிக்கலாம். அனைத்து பணம் செலுத்தல்களுக்கும் டிஜிட்டல் ரசீதுகளை உருவாக்கலாம்.

பாதுகாப்பான ஹோம் டெலிவரி பேமெண்ட்ஸ் - ஹோம் டெலிவரி பேமெண்ட்களுக்காக எஸ்.எம்.எஸ் பே அல்லது க்யூ.ஆர் மூலம் பேமெண்ட் இணைப்புகளை நீங்கள் உருவாக்கலாம். கையடக்கமாகவும் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருப்பதால் ஹோம் டெலிவரியின்போது டிஜிபி.ஓ.எஸ்-ஐ உடன் எடுத்துச் செல்லலாம்.

கூடுதல் பி.ஓ.எஸ் அம்சங்கள் - விரைவான பரிவர்த்தனை வேகத்தை வழங்க ஏதுவாக சிம் கார்டு அல்லது வைஃபை இணைப்பின் உதவியோடு டிஜிபி.ஓ.எஸ் முனையம் செயல்படுகிறது. டிஜிபி.ஓ.எஸ் முனையம் ஆட்டோ செட்டில்மெண்ட் அம்சத்தைக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் கணக்கு முடிப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. செட்டில்மெண்ட்களைக் கண்காணிக்க உங்கள் நடப்பு / சேமிப்பு கணக்கை இத்துடன் இணைக்கலாம். டிஜிபி.ஓ.எஸ் உடன் ஓரே தட்டலில் தொடர்பற்ற பணம் செலுத்துதல் வசதியை அனுபவியுங்கள்.

கார்டுகள், எஸ்.எம்.எஸ்பே, ஜிபே அல்லது பேஸாப் மூலம் ஸ்கேன் செய்தும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம். விரைவான செக்அவுட் வசதியோடு, சரக்கிருப்பு நஷ்டத்தைக் குறைக்கவும் இந்த முனையங்கள் உதவுகின்றன.

கிடைக்கக்கூடிய பி.ஓ.எஸ் முனையங்களின் வகைகள்:

  • ஜி.பி.ஆர்.எஸ் பி.ஓ.எஸ் முனையம்
  • மினி ஜி.பி.ஆர்.எஸ் பி.ஓ.எஸ் முனையம்
  • ஆண்ட்ராய்டு பி.ஓ.எஸ் முனையம்
  • எம்.பி.ஓ.எஸ் முனையம்

இந்த டிஜிபி.ஓ.எஸ் முனையங்களில் பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் வசதியும் உள்ளது. காகிதமற்ற அல்லது காகித அடிப்படையிலான ரசீது முறைகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். எச்.டி.எஃப்.சி வங்கி டி.ஜி.பி.ஓ.எஸ் முனையத்துடன் விரைவான மற்றும் துல்லியமான பில்கள் மற்றும் ஜி.எஸ்.டி. அறிக்கைகளைப் பெறவும்.

எனவே நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? டிஜிபி.ஓ.எஸ் இயந்திரம் குறித்த தகவல்கள் மற்றும் அவற்றின் எளிமையான பயன்பாடு குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றே உங்களுக்கென ஒன்றை எச்.டி.எஃப்.சி வங்கியிடமிருந்து பெற்று, எளிதான பணம் செலுத்தல் செயலாக்க முறைகளை அனுபவியுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.

மேலும் படிக்கவும்

உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.

மேலும் படிக்கவும்

மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீடுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

மேலும் படிக்கவும்


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்